ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த அதிர்வின் காரணமாக ரஷ்யா மற்றும் ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதால், அவசரமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க கடலோர பகுதிகளில் இருந்து அவசரப்பெயர்ச்சி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

“>

 

மேலும், இதேபோன்று நேற்று வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகிலும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் நில அதிர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயற்கை பேரழிவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.

“>