தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் திங்கள்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, அடையாளம் தெரியாத ஒரு நபர், சந்தையில் பாதுகாப்பு பணியில் இருந்த நான்கு அதிகாரிகள் மற்றும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது இந்த சம்பவத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பொதுமக்கள் அலறி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதேபோல், குற்றவாளி துப்பாக்கியுடன் வாகன நிறுத்துமிடத்துக்குள் ஓடுகிற காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் நடந்த வேளையில் சந்தை பகுதிக்குள் இருந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் உயிர் பாதுகாப்பிற்காக ஓடி தஞ்சம் புகுந்தனர். தற்காலிகமாக சந்தை முழுவதும் காவல்துறையினரால் முடக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
⚡️BREAKING:
Death toll rises to 6, including shooter, and 3 others injured in mass shooting at Or Tor Kor market (อตก) in Bangkok, Thailand. https://t.co/JH1UhHL5L6 pic.twitter.com/AzkKKPiJDF
— Conflict Spot (@conflictspot) July 28, 2025
“>
இந்த சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிகிறது. இருப்பினும், தாய்லாந்து – கம்போடியா இடையேயான தற்போதைய எல்லை மோதல்களுடனும் சம்பவத்திற்கு சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், சந்தை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Bodies strewn across street as crazed ‘mass shooter’ filmed gun in hand
Multiple fatalities pic.twitter.com/VXJfGhVDc1
— RT (@RT_com) July 28, 2025
“>
