தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுரண்டை பகுதியில் பைக் மீது காய்கறி ஏற்றி வந்த லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் சுரண்டை நகராட்சி கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்ஸி மற்றும் அருள் செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.