
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி கோவை குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ், அவருடைய மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் உயிரிழந்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் சம்பவ இடத்தில் இறந்தார்.
இவர்கள் காரில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கீழையூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.