காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா.

ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சி தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்தார் சர்மிளா.ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஒய்எஸ்ஆர்டிபி தலைவரும் ஆந்திர முதல்வரின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். நடந்து முடிந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து இருந்தார் சர்மிளா.