இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அவ்வாறு ஆதார் கார்டு வைத்திருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய குடும்ப பெயரை மாற்றுவதில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்ப பெயரை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்களுடைய ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் முந்தைய குடும்ப பெயரை நீக்க வேண்டும். விதிமுறைகளின் படி திருமணத்திற்கு பிறகு குடும்பப் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எந்த ஒரு நபரும் தனது குடும்ப பெயரை மாற்றுவதற்கு சுதந்திரம் உள்ளது. இருந்தாலும் குழந்தைகள் பள்ளியில் செயற்கை பெறும்போதே பெற்றோருக்கு வெவ்வேறு குடும்பப் பெயர்கள் இருந்தால் சிக்கல் ஏற்படக்கூடும். இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க திருமணமான பெண் குடும்ப பெயரை மாற்ற வேண்டும். அனைத்து ஆவணங்களிலும் குடும்ப பெயரை புதுப்பிப்பது அவசியம். ஆதார் கார்டில் இது போன்ற மாற்றங்களை செய்ய ஆதார அமைப்பின் அதிகார பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லலாம்.

திருமணத்திற்கு பிறகு நீங்கள் ஆதாரில் இருந்து பெயரை மாற்ற விரும்பினால் அல்லது குடும்ப பெயரை புதுப்பிக்க விரும்பினால் https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் சேவை மையத்திற்கு சென்று இதுபோன்ற அப்டேட்டுகளை செய்வது நல்லது. ஏனென்றால் பெயர் உள்ளிட்ட பயோமெட்ரிக் அப்டேட்டுகளை நாம் செய்ய முடியாது.