தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் 40000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீதமுள்ள பயனாளிகளுக்கும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 2024- 25ஆம் நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு சுமார் ரூ.3,10,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி மொத்தமாக ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.