
பாலியல் தொல்லை தொடர்பாக கலாஷேத்ரா உதவி பேராசியர் ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், இன்று அதிகாலை சென்னை திரும்பிய உடன் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்ஜாமின் பெற ஹரி பத்மன் வழக்கறிஞரை நாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் நடத்தினர்.