தமிழ்நாட்டில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். இவர் டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் பாஜக அரசியல் சூழல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக பாஜக அண்ணாமலை அறிவித்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுகவின் குரல் குறைந்ததோடு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்து அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர், பாஜக அண்ணாமலை மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். மேலும் இந்த சந்திப்பின் போது அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.