பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.