விசிக மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமா அறிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக முகமது சலீம் தேடப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் போதைப்பொருள் வழக்கில் தேடப்படும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் தம்பி ஆவார்.