தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 118 பெரும்பான்மை கிடைக்காததால் ஆளுநர் ஆட்சி அமைக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திமுக கூட்டணி கட்சிகளிடம் பேசிய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் திமுக கூட்டணியில் தான் தாங்கள் தொடர்வதாகவும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்த நிலையில் அமைச்சர் அவையில் பங்கு பெற இருக்கிறது. அதோடு அடுத்து வரும் உள்ளாட்சி மாநிலங்களவை மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் தான் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில்…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 9, 2026
இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்றைய நெருக்கடியான சிக்கலை தவிர்க்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்கிறோம் என்பதை அறிவித்ததை நான் வரவேற்கிறேன். காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவிக்க கூட அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் திமுக உடனான உறவை முறித்துக் கொண்டனர்.
மேலும் அதே சமயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்பும் என்று அறிவித்ததால் இது திமுக மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிதாக அமைய இருக்கும் அரசு கடந்த அரசின் திட்டங்களை தொடர வேண்டும் எனவும் மகளிர் உரிமைத்தொகை மற்றும் காலை உணவு திட்டம் ஆகியவற்றில் எந்தவித தொய்வும் ஏற்படாமல் கவனமாக செயல்படுத்த வேண்டும் எனவும் புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
