தென்னாப்பிரிக்கா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது..

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து டீம் இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20ஐ  தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் 2 டி20ஐ  போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நிலையில், 3வது போட்டியில் தோல்வியடைந்தது.

இந்த தொடரில் இந்தியா அணி  2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இன்னும் இரண்டு டி20 போட்டி மீதம் உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிலையில் டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (சி), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (வி.கே), ஜிதேஷ் சர்மா (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா (து.கே.), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கே), சஞ்சு சாம்சன் (வி.கீ), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (வி.கீ.), கே.எல். ராகுல் (வி.கே.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி*, ஜஸ்பிரித் பும்ரா (து.கே), பிரசித் கிருஷ்ணா.

குறிப்பு :

திரு ரோஹித் சர்மா மற்றும் திரு விராட் கோலி ஆகியோர் சுற்றுப்பயணத்தின் ஒயிட்-பால் லெக்கில் இருந்து ஓய்வு பெறுமாறு வாரியத்திடம் கோரிக்கை விடுத்தனர். திரு முகமது. ஷமி தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார் மற்றும் அவரது உடல் தகுதிக்கு உட்பட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் :

1வது டி20- டிசம்பர் 10, டர்பன்

2வது டி20- 12 டிசம்பர், கெபேரா

3வது டி20- டிசம்பர் 14, ஜோகன்னஸ்பர்க்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் :

1வது ஒருநாள் போட்டி – டிசம்பர் 17, ஜோகன்னஸ்பர்க்

2வது ஒருநாள் போட்டி – 19 டிசம்பர், கெபேரா

3வதுஒருநாள் போட்டி – 21 டிசம்பர், பார்ல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் :

முதல் டெஸ்ட்- 26-30 டிசம்பர், செஞ்சுரியன்

2வது டெஸ்ட்-3-7 ஜனவரி, கேப்டவுன்