புவனேஷ்வர் குமாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி சிங் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் முதன்முறையாக ரஜத் படிதார், சாய் சுதர்ஷன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர் போன்ற வீரர்கள் திரும்பியுள்ளனர். ஆனால் இந்த அணியில் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவருக்கு ஏன் அணியில் இடம் கிடைக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். புவனேஷ்வர் குமார் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.சிங் ட்வீட் செய்ததாவது, உண்மையில் ஆச்சரியப்படுகிறேன், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் புவனேஷ்வர் குமார் வெள்ளைப்பந்து அணிகளில் எதிலும் ஒரு பகுதியாக இல்லை.  இந்த சீசனில் நான் அவரை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன், அவர் சிறந்த ஃபார்மில் இருப்பதாக தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டார் :

சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜய் ஹசாரே டிராபியின் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சையது முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புவனேஷ்வர் குமார் தனது கடைசி ஒருநாள் போட்டியை ஜனவரி 2022 இல் விளையாடினார், அதே நேரத்தில் அவர் கடைசியாக நவம்பர் 2022 இல் இந்தியாவுக்காக டி20 போட்டியில் விளையாடினார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (து.கே),
வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ். , அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ, கே.), சஞ்சு சாம்சன் (வி.கீ.), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.