இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4வது டி20 போட்டியில் பிளேயிங் லெவன் இப்படி இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது டி20 போட்டி டிசம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. நாளை இரு அணிகளும் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ராய்ப்பூரில் இதுவரை ஒரு டி-20 சர்வதேச போட்டி கூட நடைபெறவில்லை. டி-20 போட்டி டிசம்பர் 1ஆம் தேதி இங்கு முதல்முறையாக நடைபெறவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. 3வது டி20 போட்டியில் இந்தியாவை  5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்நிலையில் 4வது டி20ஐ போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியா முயற்சி செய்யும். இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் திரும்பியிருப்பது மகிழ்ச்சியான செய்தி . அவர் ராய்ப்பூர் டி-20 போட்டியில் துணை கேப்டனாக அணியில் இணைவார்.

ஆஸ்திரேலிய அணி மாறியுள்ளது :

அதே சமயம், ஆஸ்திரேலியாவைப் பற்றி பேசினால், அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கலாம், ஏனெனில் ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் சீன் அபோட் போன்ற மூத்த வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ஜோஷ் பிலிப் மற்றும் பென் மெக்டெர்மாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பென் துவர்ஷூயிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கிறிஸ் கிரீன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீபக் சாஹர் விளையாடும் லெவனில் இடம் பெறலாம் :

3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கினார். இந்த சூழ்நிலையில் தீபக் சாஹர் விளையாடும் லெவனில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணையலாம்.

சாத்தியமான இந்திய அணி :

 யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

சாத்தியமான ஆஸ்திரேலிய அணி : 

டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், பென் மெக்டெர்மாட், ஜோஷ் பிலிப், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, மேத்யூ வேட், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்/பென் ட்வார்ஷூயிஸ், ஜேசன் பெஹ்ரென்டாஃப்