
மத்திய பட்ஜெட் உரையை கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு எந்த வித அறிவிப்பும் இல்லாததால், தமிழ்நாடு என்ற வார்த்தை உரையில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக, நிர்மலா சீதாராமன் தனது உரையில் ஏதேனும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவார். ஆனால் இந்த பட்ஜெட் உரையில் அவர் திருக்குறளை சுட்டிக்காட்டவில்லை. இதனால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து வருகின்ற ஜூலை 27ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.