தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக கட்சியிலிருந்து அடுத்தடுத்த மூத்த தலைவர்கள் பலர் விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் சி விஜயபாஸ்கர் மற்றும் சி.வி சண்முகம் ஆகியோர் தங்கள் முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்களா என்ற கேள்விக்கு இருவருமே இதுவரை பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுக முன்னாள் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் தற்போது அதிமுகவை சேர்ந்த கந்தர்வகோட்டை முன்னாள் எம்எல்ஏ நார்த்தமலை ஆறுமுகம் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ சுப்பிரமணி முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். மேலும் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது