சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல் பயணிகள் பரபரப்பாக காணப்பட பேருந்துகள் சென்றது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பயணியின் மீது பயங்கரமாக மோதியது. அந்த நபர் பேருந்து சக்கரத்தில் சிக்கியதால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது காயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH | கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணி மீது அரசு பேருந்து மோதி விபத்து. பதறவைக்கும் சிசிடிவி காட்சி. காயமடைந்தவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி#BusAccident #kilambakkam #cctv #News18TamilNadu pic.twitter.com/PgH33eon17
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 29, 2026
