அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாளை காலை 9:00 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் விளக்கம் கொடுக்க இருக்கிறார். அதாவது அவர் அதிமுகவிலிருந்து விலகுவதாக கூறப்படும் நிலையில் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதே சமயத்தில் தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நாளை அவர் அதிகாரப்பூர்வமாக கோபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி சத்திய பாமா தற்போது செங்கோட்டையனை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாக கூறப்படும் நிலையில் செங்கோட்டையனை சத்தியபாமா சந்தித்தது பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் நாளை செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்பு என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.