ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்தது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கும் விற்பனையாகிறது . அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 2.10 காசுகள் குறைந்து 81.40 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2100 ரூபாய் குறைந்து 81400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இன்று நகை வாங்கினால் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தலாம்.