கடந்த சில மாதங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 715 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து 78 ரூபாய்க்கும் கிலோ வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.