ஆபரண தங்கத்தின் விலை 46 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வந்த 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 770 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஆனால் விலையில் மாற்றம் இல்லாமல் வெள்ளி கிராமுக்கு 77.50 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.