வார விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில் ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனைப் போலவே எலும்புகள் இல்லாத கோழி கறி ஒரு கிலோ 210 ரூபாய், கறிக்கோழி ஒரு கிலோ 160 ரூபாய், கோழி கல்லீரல் ஒரு கிலோ 120 ரூபாய், நாட்டுக்கோழி கறி ஒரு கிலோ 360 ரூபாய், தோல் இல்லாத கோழி கறி 200 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.