போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தனியார் யூடியூப் சேனலின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், ‘மக்களவைத் தேர்தல் நேரத்தில் I.N.D.I.A கூட்டணி என்பது பொழுது போக்கு மட்டுமே. மதசார்பின்மை என்ற பெயரில், பெரும்பான்மை மக்களின் மதத்தை கேவலமாக பேசுகின்றனர்’ என்றார்.