இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் 16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் தற்போது தோல்வி அடைந்தது.

ஒரே ஏவுதலில் புவியைக் கண்காணிக்கும் முதன்மைச் செயற்கைக்கோள் உட்பட மொத்தம் 16 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. பூமியைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்ட ‘EOS N1’ செயற்கைக்கோள் இதில் முக்கியமானது. பூமியில் உள்ள மிகச்சிறிய பொருட்களைக் கூட அடையாளம் காணும் வகையில், அதிநவீன உணரிகளுடன் (Sensors) இது வடிவமைக்கப்பட்டது.


அன்விஷா (Anvesha): விவசாயம் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் போன்ற பணிகளுக்காக இந்தச் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும். த விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில், சென்னையைச் சேர்ந்த ‘ஆர்பிட் எய்ட்’ (Orbit Aid) நிறுவனத்தின் செயற்கைக்கோளும் இடம்பெற்றது.

புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், விண்ணிலேயே செயற்கைக்கோள்களுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்புவது (Refueling) குறித்த முக்கிய ஆய்வுகளையும் இஸ்ரோ மேற்கொள்கிறது. மேலும், ‘EOS-01’ செயற்கைக்கோள் மூலம் எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் கூடாரங்களை எளிதாகக் கண்டறிய முடியும் என்பதால், இது பாதுகாப்புத் துறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்த நிலையில் 2 ஸ்டேஜ் களை கடந்த இந்த அற்புதமான ராக்கெட் 3-வது ஸ்டேஜில் தோல்வியை சந்தித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மேற்கொண்ட பி.எஸ்.எல்.வி.-சி62 விண்கலப் பயணத்தின் போது எதிர்பாராத விதமாக ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஏவுகணையின் மூன்றாவது அடுக்கான பி.எஸ்.3 (PS3 stage) நிலையின் இறுதிச் செயல்பாட்டின் போது இந்த ஒழுங்கின்மை (Anomaly) கண்டறியப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விண்வெளி விஞ்ஞானிகள் தற்போது விரிவான பகுப்பாய்வைத் தொடங்கியுள்ளனர்.

மேலும்  இந்த ஆய்வின் முடிவில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், எதிர்கால ஏவுகணைப் பணிகளில் இத்தகைய சிக்கல்கள் நேராமல் இருக்கத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.