
ஜம்மு மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் இன்று பல ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்னியா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தியாவின் வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியதால், எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு, லே, சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், சிம்லா உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதில் ஜம்மு விமான நிலையம் முழுவதும் தேசிய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.