தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தற்போது தீவிர பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று அவர் காரைக்குடிக்கு பிரச்சாரத்திற்காக செல்கிறார். அவர் மதுரை வழியாக காரைக்குடிக்கு பிரச்சார வேனில் செல்லும் நிலையில் மதுரையில் திடீரென தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் ஒன்று கூடி அவரது வாகனத்தை நகர முடியாதவாறு கூடினர்.
இதன் காரணமாக அவர் உடனடியாக வேனிலிருந்து வெளியே வந்து அனைவரையும் பார்த்து கையசைத்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் பலமுறை தன்னுடைய வாகனத்தை பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தியும் அதனை தமிழக வெற்றிக்கழகத்தில் தொண்டர்களும் ரசிகர்களும் காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை. நடிகர் விஜய் எங்கு சென்றாலும் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து விபத்து நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. மேலும் அந்த வகையில் இன்றும் நடிகர் விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து இருவர் சென்ட்ரல் மீடியனில் மோதி விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.
#Watch | விஜயை பின் தொடந்ததால் பைக்கில் இருந்து விழுந்து சென்டர் மீடியனில் மோதிய இளைஞர்கள்! #SunNews | #TVKVijay | #Sivagangai | #BikeAccident pic.twitter.com/m5Xy37f79N
— Sun News (@sunnewstamil) April 10, 2026
