ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 4-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி உருவாகியுள்ள நிலையில் இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பது நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஈவெரா திருமகன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல்நலக்குறைவினால் இறந்ததால் அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது.‌ இந்நிலையில் பிப்ரவரி 3,4,5 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 8-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.