விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இரண்டு நாட்களில் நிறைவடையும் என்றும் தொகுதி முழுவதும் 276 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.