ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 2வது டி20 போட்டி நவம்பர் 26 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், 3வது டி20 போட்டி 28ஆம் தேதி கவுகாத்தியிலும், 4வது டி20 போட்டி டிசம்பர் 1ம் தேதி ராய்பூரிலும், 5வது டி20 போட்டி டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

இந்திய அணி :

சூர்யகுமார் யாதவ் (கே), ருதுராஜ் கெய்க்வாட் (து.கே), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் , முகேஷ் குமார்.

மேலும் ராய்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.