தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார் . ஆளுநருக்கு எதிரான வழக்கில் 2020 முதல் மசோதாக்கள் கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.   தொடர்ந்து தலைமை நீதிபதி, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி ஆளுநர் செயலாளர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.