
ஆப்கானிஸ்தானில் பைசா பாத்திலிருந்து 259 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6.8 மணிக்கு பூமிக்கு அருகில் 167 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி தான் இங்கு 4.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.