கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.77.50க்கு விற்பனையாகிறது