தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது அதற்கு தயாராகி வருகிறது. குறிப்பாக புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில இணைத்து பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் அதிமுக கட்சிகயின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையை இணைந்தார்.

இவரைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் இணைந்தார். இன்னும் பல அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்.பி சத்தியபாமா ஆகியோரது தலைமையில் அதிமுகவிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும் அதற்காக அவர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.