அமைச்சர் பொன்முடி பாலியல் தொழிலாளி குறித்து மிகவும் ஆபாசமாக பேசினார். அதாவது உடலுறவை பட்டை நாமம் என சைவ மற்றும் வைணவத்துடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக திமுக கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் எம்.பி கனிமொழி பெண்களை குறித்து இப்படி கொச்சையாக பேசுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை முதல்வர் ஸ்டாரின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக தற்போது அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே பெண்களின் இலவச பேருந்து பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரின் கட்சி பதவியை திமுக பறித்துள்ள நிலையில் அமைச்சர் பதவியில் இருந்தும் என்று கூறப்படுகிறது.
