தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்த சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட இருந்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்கு சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு வெளியே வந்த அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பலமுறை கட்சியில் சேர்க்க முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை.
இதன் காரணமாக சமீபத்தில் சசிகலா புதிய கட்சியை ஆரம்பித்தார். அவரது கட்சி கொடியில் அண்ணா, ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தது. இந்த நிலையில் இன்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று தன் கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். மேலும் கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
