
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் தற்போது அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது பாஜக கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக துறை சோதனை நடைபெறுகிறது.
இதேபோன்று முருகானந்தத்தின் சகோதரரும் அதிமுகவின் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளருமான பழனிவேல் என்பவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. மேலும் இன்று காலை முதல் இருபது வீடுகளிலும் அமலாக்கத்துறையின் அதிரடியாக சோதனை மேல் கொண்டு வருவது அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.