ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சென்னை சமுத்திரம் மலைமேடு பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கும் மதன், மனோஜ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று கஜலட்சுமி தனது மகன்களுடன் திருப்புட் lகுழி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து துக்க நிகழ்வில் பங்கேற்ற பிறகு மூன்று பேரும் ஓச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். தாமல் பகுதியில் வைத்து முன்னாள் சென்ற கண்டைனர் லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

இதனால் நிலை தடுமாறி இருசக்கர வாகனம் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கஜலட்சுமியும், மதனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனோஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது