பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பட்டியலின மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க அவர் விலகியது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.