திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஐடி அதிகாரிகள் ஜெகத்ரட்சகனிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பதட்டமான சூழல் நிலவி வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.