வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து கலவரம் நின்றது. இதற்கிடையில் நேற்று பிரதமர் சேக் ஹசீனா இட ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததால் மீண்டும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்த நிலையில் போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் தற்போது பிரதமர் சேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி விட்டாராம். மேலும் இதனால் வங்கதேசத்தில் இராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்க இருக்கிறது.