பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், சர்வதேச கருத்தரங்குகள்-விளையாட்டு போட்டிகளில் கடும் நிபந்தனைகள் அடிப்படையில் மது விநியோகம் செய்யப்படுகிறது; நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து, முன்வைப்புத் தொகை முடக்கப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், நேரக்கட்டுப்பாடு, எவ்வளவு மதுபானம் வழங்குவது என டாஸ்மாக் தான் தீர்மானிக்கும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளது.