ஈரோடு கிழக்கில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியை முதலில் சந்தித்து பேசிய நிலையில் அடுத்ததாக ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.
இன்று பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் பணிமனையில் பாஜக கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் காரணமாக பாஜகவின் முழு ஆதரவும் பன்னீர்செல்வத்திற்கு தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.