ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வெளியில் இருந்து உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்வதற்கு தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்கம் என்பது தனியாருக்கு சொந்தமானது என்பதால் அவர்கள் தான் அதில் எவ்வித முடிவையும் எடுப்பார்கள்.
அதில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. தனிநபர் சொத்து சார்ந்த விவகாரத்தில் அவர்கள் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதோடு தியேட்டர்களில் குடிநீர் வசதி மட்டும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கான உணவுகள் மற்றும் சிறுவர்களுக்கான உணவு பொருட்களை பெற்றோர்கள் எடுத்துச் செல்வதற்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.