புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவரான ஏசி சண்முகம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஒரு மாத காலம் அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது