தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கன மழை பெய்து வந்த நிலையில் அங்கு இயல்பு நிலை வர தொடங்கியுள்ளது. ஆனால் விழுப்புரம், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நிலசரிவுகள் ஏற்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியிலும் தென்பெண்ணை ஆறு உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தினால் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தற்போது தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வெள்ளம் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அபராதம் இன்றி பொதுமக்கள் டிசம்பர் 10ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று முன்னதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்துவதற்கு டிசம்பர் 10 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.