கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே 40 இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை,நெட்ல மட்டும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே கேரளா மற்றும் கர்நாடகாவில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.