தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியதால் அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்தது. தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமித்து அவர்களின் பனிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி உடன் நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் முடிவடைந்த நிலையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிராக தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தற்காலிக செவிலியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் 4,308செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.