தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்த மக்களுக்கு அதிர்ச்சி செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் இனி வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்த வாரம் 40 டிகிரி செல்சியஸ் வரையும் உள் தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகமாக வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.