தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி  ஜனவரி 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர்.

இதன் காரணமாகத்தான் திருவள்ளுவர் தினத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது முதல் மாவட்டமாக சென்னைக்கு திருவள்ளுவர் தினத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.